விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு துப்பாக்கி

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே விவசாய நிலத்தில் புள்ளிமான் தோல் மற்றும் நாட்டு துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-04-21 16:37 GMT

நாட்டு துப்பாக்கி 

வேலூர் மாவட்டம்,ஒடுகத்தூரை அடுத்த கொட்டாவூரில் விவசாய நிலத்தில் புள்ளி மானின் தோல், ஒரு நாட்டுத் துப்பாக்கி கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, விவசாய நிலத்தில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த நிலம், அதே கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் சந்தோஷ் (வயது 22) என்பவருக்கு சொந்தமானதாகும். அந்த விவசாய நிலத்தில் கிடந்த புள்ளி மானின் தோல், நாட்டுத் துப்பாக்கியை வனத்துறையினர் கண்டுபிடித்து மீட்டனர்.

Advertisement

தந்தை, மகனிடம் வனத்துறையினர் விசாரித்தபோது, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாழைமேடு பகுதியில் மர்மநபர்கள் வேட்டையாடிய 2 மானின் தோல், தலைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த மர்மநபர்கள் கொட்டாவூருக்கு அடிக்கடி வந்து சுற்றித்திரிந்தனர். எ

னவே அவர்கள் தான் விவசாய நிலத்தில் புள்ளி மானின் தோல், நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருக்கலாம், என்று தெரிய வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, புள்ளி மானை யார் வேட்டையாடியது? அந்த நாட்டுத் துப்பாக்கி யாருடையது? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News