காரிமங்கலத்தில் ஏல சிட்டு நடத்தியவரை தாக்கிய தம்பதியர் கைது

காரிமங்கலத்தில் ஏல சீட்டு நடத்தியவரை தாக்கிய தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2024-06-30 08:54 GMT
காரிமங்கலத்தில் ஏல சிட்டு நடத்தியவரை தாக்கிய  தம்பதியர் கைது

காவல் நிலையம்

  • whatsapp icon

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலத்தை சேர்ந்தவர் பத்மாவதி. இவர் வெள்ளி நகைக்கடை வைத்துள்ளார். மற்றும் 5 லட்சத்திற்கான ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சீட்டு போட்டுள்ளனர். இந்நிலையில் ஏலச்சீட்டு எடுத்த அதே பகுதியை சேர்ந்த கைலேசன் வனிதா தம்பதியினர், மாத தவணையை சரியாக செலுத்தவில்லை.

இதுபற்றி பத்மாவதி பல முறை கேட்டும், அவர்கள் பணத்தை கட்டாமல் இருந்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், ஏலச்சீட்டு பணத்தை கேட்ட போது, தம்பதியினர் சேர்ந்து பத்மாவதியை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதுபற்றி பத்மாவதி அளித்த புகாரின் பேரில், காரிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட கைலேசன் என்பவரை நேற்று கைது செய்தனர். அவரது மனைவி வனிதாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News