தனியார் பஸ் டயர் வெடித்ததில் பயணம் செய்த தம்பதி காயம் ...

தனியார் பஸ் பின்பக்க டயர் வெடித்ததில் பயணம் செய்த தம்பதி இருவரும் காயம் அடைந்தனர்.;

Update: 2024-04-16 05:27 GMT

இருவரும் காயம் 

சேலம் கிச்சிப்பாளையம் பகுதி ஆறுமுகம்நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 58) இவருடைய மனைவி புவனேஸ்வரி (50). இவர்கள் இருவரும் கூடுதுறைக்கு தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ் அரியானூர் மேம்பாலம் வழியாக வந்த போது திடீரென பஸ்சின் பின்பக்க டயர்வெடித்தது. இதில் பஸ்சில் அமர்ந்து இருந்த ஆறுமுகம், புவனேசுவரி இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News