காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி
அருமனையில் கோவிலில் திருமணம் செய்த காதல் ஜோடியினர், காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.;
Update: 2024-06-16 06:20 GMT
அருமனையில் கோவிலில் திருமணம் செய்த காதல் ஜோடியினர், காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிதறால் அம்பலக்கடை பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அஜய்.தனியார் நிறுவன சூப்பர் வைசராக பணிபுரிந்து வருகிறார்.நல்லூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் அஜயகுமார்.இவரது மகள் அஸ்வதி.நர்ஸ். அஜய்யும், அஸ்வதியும் நண்பர்களாக பழகினர். நாளடைவில் இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கினர். இந்தநிலையில், இவர்கள் இரு வரும் வீட்டை விட்டு வெளியேறி, அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்தனர்.தொடர்ந்து இந்த ஜோடி அருமனை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தங்கள் இருவரையும் வைக்குமாறு சேர்த்து போலீசாரிடம் தெரிவித்தனர்.இதை தொடர்ந்து இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், காதல் ஜோடிக்கு அறிவுரை கூறி சேர்த்து அனுப்பினர்.