15 அடி குழியில் விழுந்த பசுமாடு - பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

பண்டாரவாடையில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட 15 அடி குழியில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

Update: 2024-06-17 08:01 GMT

மீட்கப்பட்ட பசுமாடு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவடை ஊராட்சி கிராமத்தில் கோவில் தேவராயன் பேட்டை மேல தெருவை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான பசுமாடு தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட 15 அடி குழியில் தவறி விழுந்து விட்டது.  இதைத்தொடர்ந்து அப் பகுதி மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் தீயணைப்பு படையினர் குழியில் விழுந்த பசுமாட்டினை சிறிய காயங்களுடன் மீட்டு உரிமையாளர் வசம் ஒப்படைத்தனர். இதனால் தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது.
Tags:    

Similar News