மாட்டுப் பொங்கல் விழா

கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சேலத்தில் மாட்டுப் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-16 11:58 GMT

கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சேலத்தில் மாட்டுப் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

.தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தை முதல் நாளான நேற்று சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் படையலிட்டு வணங்கினர். அதனை தொடர்ந்து 2ம் நாளான இன்று உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழகம் முழுவதும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, சேலம் குரும்பப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகாலையிலேயே எழுந்து தங்களின் செல்ல பிள்ளையாகவும், உயிர்த் தோழானாகவும் இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி கூறும் வகையில், மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, வண்ண பொடிகள் பூசி அழகு சேர்த்தனர். பின்னர், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News