ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த மாடுபிடி வீரர்கள்
கொசவபட்டியில் புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 36 பேர் காயமடைந்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-10 08:56 GMT
ஜல்லிக்கட்டு போட்டியில் 36 மாடுபிடி வீரர்களுக்கு காயம்
திண்டுக்கல் சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் பாலமேட்டை சேர்ந்த முருகானந்தம் (வயது 22),காளை உரிமையாளர் தவசி மேடையைச் சேர்ந்த ஆரோக்கியசாமி(30) ஆகிய 2 பேர் மேல் சிகிச்சை க்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மொத்தம் 36 பேர் காயமடைந்தனர். புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார், இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, ரமேஷ் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் உள்பட 210 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.