பேருந்து நிலையத்தில் சுற்றி திரியும் மாடுகள்- மக்கள் அவதி!
பேருந்து நிலையத்தில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.;
Update: 2024-05-16 14:12 GMT
Cows wandering around the bus stand people suffered.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் மாடுகள் நடமாடி கொண்டிருக்கின்றன.
இன்று பேருந்து நிலையத்தில் காத்திருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களை ஒரு பசு மாடு விரட்டியது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
இதற்கு ஆம்பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.