சி.பி.எம். நகர குழு கூட்டம்
குமாரபாளையத்தில் நடந்த சி.பி.எம். நகரகுழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.;
Update: 2024-02-19 02:07 GMT
நகரக்குழு கூட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சி.பி.எம். நகரகுழு கூட்டம் நகர குழு உறுப்பினர் சரவணன் தலைமையில் நடந்தது. பிப். 18ல் சி.பி.எம் மூத்த நிர்வாகி, ராமசாமியின் நூற்றாண்டு விழா சிறப்பு பேரவை கூட்டம் நடத்துவது, மக்களை பாதிக்கக்கூடிய ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, பிப். 23ல் குமாரபாளையம் மின்வாரிய அலுவலகம் முன்பு சி.பி.எம். சார்பில், நகர குழு செயலர் சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, மனு கொடுத்தல் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் அசோகன், காளியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.