பட்டாசு ஆலை வெடி விபத்து - நேரில் சென்று ஆறுதல் கூறிய துரை வைகோ

விருதுநகர் மாவட்டம் ராமு தேவன் பட்டியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய துரை வைகோ

Update: 2024-02-22 06:46 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ராமு தேவன் பட்டியில் கடந்த 17ம் தேதி விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ஆலையை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 மேற்பட்ட தொழிலாளர்கள் அரசு மருத்துவமனைகளில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ராமு தேவன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 10 தொழிலாளர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சென்று மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த பத்து தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 ஆயிரம் நிவாரணம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 உயிர்களை நாம் இழந்து உள்ளோம் என்றார். மேலும் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் விதிகளை மீறி அதிக அளவில் ஒரு அறையில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது தான் வெடி விபத்துக்கு காரணம் என துரை வைகோ கூறினார். மேலும் பேசிய துரை வைகோ பட்டாசு ஆலை நடத்தும் உரிமையாளர்கள் அரசு வகுத்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றார். மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் கள் தொழிலாளர்களை விதிகளை மீறி பட்டாசுகளை உற்பத்தி செய்ய சொன்னால் அவ்வாறு செய்ய மாட்டோம் என தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார். ஒரு பட்டாசு ஆலை உரிமையாளர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த பட்டாசு உற்பத்திக்கும் வெகுவாக பாதிப்பு ஏற்படுகிறது என துரை வைகோ கூறினார். மேலும் பட்டாசு உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட்டால் மட்டுமே விபத்துகளை தவிர்க்க முடியும் என்றார்.
Tags:    

Similar News