ஊதியம் வழங்காமல் பட்டாசு ஆலை மூடல் - ஊழியர்கள் புகார்

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் மற்றும் தீபாவளிக்கான ஊக்கத்தொகையும் வழங்காமல் பட்டாசு ஆலை மூடப்பட்டதாக காவல் நிலையத்தில் ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.

Update: 2023-10-29 03:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் மாவட்டத்தைச் சுற்றி 1000 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காரிசேரி பகுதியில் லட்சுமி ஸ்ரீ பயர் ஒர்க்ஸ் இயங்கி வருகிறது இந்த பட்டாசு ஆலையில் 26 நபர்கள் பணி புரிந்து வருகின்றனர் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பட்டாசு ஆலை செயல்பட்டு வரும் நிலையில் கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு வரை பட்டாசு ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு  முறையாக ஊதியம் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது பட்டாசு ஆலை உரிமையாளர் எந்தவித அறிவிப்பும் இன்றி ஆலையை மூடிவிட்டதாக கூறப்படுகிறது உரிமையாளரிடம் பணி புரியும் ஊழியர்கள் இது குறித்து கேட்டதற்கு ஆலையை தொடர்ந்து நடத்த முடியவில்லை எனவும் அதனால் மூடிவிட்டதாகவும் கூறியுள்ளனர். நிலுவையில் உள்ள ஊதியம் ஊதியம் தீபாவளிக்கான ஊக்கத் தொகையை பணிபுரியும் ஊழியர்கள் கேட்டதற்கு தன்னால் வழங்க முடியாது எனவும் எங்கு சென்றும் வேண்டுமானாலும் புகார் அளித்துக் கொள்ளுங்கள் என ஆலை உரிமையாளர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் பட்டாசு ஆலையில் பணிபுரிந்த ஊழியர்கள் தங்களுக்கான ஊதிய தொகை மற்றும் தீபாவளிக்கான ஊக்க தொகையை பெற்றுத் தரக் கோரி ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Tags:    

Similar News