பட்டாசு ஆலை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

அனுமதி இன்றி பட்டாசு ஆலை நடத்தி விபத்து ஏற்படுத்தியவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Update: 2024-03-24 09:14 GMT
அனுமதி இன்றி பட்டாசு ஆலை நடத்தி விபத்து ஏற்படுத்தியவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை.

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக வெடிபொருள் மற்றும் பட்டாசு போன்றவைகளை தயார் செய்பவர்கள் மீதும் அதனால் வெடிவிபத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், விருதுநகர் தாலுகா ஆனை கூட்டம் கிராமத்தைச் சார்ந்த மகேஷ்வரன் என்பவர் சட்டத்திற்கு புறம்பாக நடத்திய பட்டாசு ஆளையில் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது .இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரனை நீதிமன்ற காவல் நிலைக்கு சிறையில் அடைத்தனர்..

அவர் தற்போது சிலையில் அடைக்கப்பட்ட நிலையில் இது போன்று அரசு அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பதற்காக அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதை அடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் சட்ட விரோதமாக பட்டாசு ஆலை நடத்தி வெடி விபத்திற்கு காரணமாக இருந்த மகேஸ்வரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை அடைக்க உத்தரவிட்டிருந்தார்.

மகேஸ்வரன் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் மேலும் இதுபோன்ற சட்ட விரோதமாக பட்டாசு மற்றும் வெடிபொருட்களை தயார் செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News