சரிந்த தடுப்புகளால் தொடரும் விபத்து
சரிந்த தடுப்புகளால் தொடரும் விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
By : King 24x7 Website
Update: 2023-12-05 09:03 GMT
சின்னாளபட்டி நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டை மறித்து போலீசார் அமைத்த தடுப்புகள் சரிந்து அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையில் கிராம சாலைகளுக்கான இணைப்பு பகுதியில் போலீசார் தடுப்புகளால் அடைத்தனர். இதையடுத்து சின்னாளபட்டி மேம்பாலம் வரை கூடுதலாக 4 கிலோ மீட்டர் துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது. பல்வேறு தரப்பினரும் ஆட்சேபனை தெரிவித்த போதும் திறப்பதற்கான நடவடிக்கை இல்லை. இதோடு அடிக்கடி இங்குள்ள தடுப்புகள் சரிந்து விழுந்து விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது. இருந்தும் தீர்வு கிடைக்கவில்லை. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.