தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் கடன் மேளா

பி. உடையாப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் நடந்த கடன் மேளாவில் பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்தவர்களுக்கு கடன் வழங்கப்பட்டது.;

Update: 2024-07-05 07:04 GMT

கரூர் மாவட்ட கூட்டுறவு துறை மூலம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில், கடன் வழங்கும் கடன் மேளா நிகழ்ச்சி, கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா,பி. உடையாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மாலதி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், சங்க நிர்வாகிகள் வேலாயுதம், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் வழங்குவதற்காக கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பி. உடையாபட்டி தொடக்க கூட்டுறவு வேளாண் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த முகாமில் கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு வளர்ப்பு, கறவை மாடுகள் வளர்ப்பு, பெட்டிக்கடை, பூக்கடை, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டது. இந்த முகாமில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் தொழிலுக்கு ஏற்றவாறு தொழில் நடத்த விண்ணப்பித்த மனுதாரர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News