சேலம் அருகே நல்லாம்பட்டியில் கிரிக்கெட் போட்டி

நல்லாம்பட்டி காட்டுவளவு சக்திமாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடந்தது.

Update: 2024-05-09 05:27 GMT

நல்லாம்பட்டி காட்டுவளவு சக்திமாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடந்தது.

சேலம் மாவட்டம் நல்லாம்பட்டி காட்டுவளவு சக்திமாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு நல்லாம்பட்டி என்.சி.சி. கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது.

5 நாட்கள் நடந்த போட்டியில் இறுதியில் நல்லாம்பட்டி என்.சி.சி. கிரிக்கெட் கிளப், ஜலகண்டாபுரம் ஸ்கூல் பாய்ஸ் அணியும் விளையாடின. இதில் ஜலகண்டாபுரம் அணி வெற்றி பெற்று முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், கோப்பை பெற்றது. 2-வது பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பையை நல்லாம்பட்டி அணி பெற்றது. நிகழ்ச்சியில் சேலம் மாநகர ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரகுநாத் முதல் பரிசை வழங்கினார்.

 

Tags:    

Similar News