பாரத்நெட்டின் பைபர் ஆப்டிக்கை சேதப்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை
பாரத்நெட்டின் பைபர் ஆப்டிகலை சேதப்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
By : King 24x7 Website
Update: 2023-12-14 04:36 GMT
ஈரோடு மாவட்டத்திலுள்ள 225 கிராம ஊராட்சிகளிலும் இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை 85 சதவிதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைக்கப்படுகிறது. இதுவரை நமது மாவட்டத்தில் உள்ள மொத்த ஊராட்சிகளில் 127 ஊராட்சிகளில் இணைய வசதி வழங்கிட தயார் நிலையில் உள்ளது. கண்ணாடி இழை 85 சதவீதம் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சிலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கண்ணாடி இழை கொண்டு செல்லக்கூடாது என தடை செய்வதாகவும். கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது. பயிர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது , எனவே இக்கண்ணாடி இழை ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல பொதுமக்கள் தடை செய்யக்கூடாது. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் POP மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், UPS, Router, Rack மற்றும் கண்ணாடி இழை வலையமைப்பு உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகளாகும். உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும், கண்ணாடி இழைகளைத்துண்டாக்கும் மற்றும் மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல தடைசெய்யும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.