தேனி மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டம் - மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் காரிப் பருவ பயிர்களுக்கு பிரதம மந்திரியின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-03 06:24 GMT

பைல் படம் 

தேனி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் காரிப் பருவத்தில் நெல், மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை, எள், துவரை, பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரியின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தினை KSHEMA GIC என்ற காப்பீடு நிறுவனம் செயல்படுத்துகிறது
Tags:    

Similar News