கோடி கணக்கில் பண மோசடி - பொதுமக்கள் புகார்!

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மீது பொதுமக்கள் பண மோசடி புகார் அளித்துள்ளனர்.

Update: 2024-05-14 08:20 GMT

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மீது பொதுமக்கள் பண மோசடி புகார் அளித்துள்ளனர்.


ராணிப்பேட்டை அருகே குறைந்த விலையில் தங்கம் தருவதாகக் கூறி கோடி கணக்கில் பணத்தை மோசடி செய்த பெண் மீது கலெக்டர் அலுவலக புகார் பெட்டியில் மனு செலுத்தினர். இதுகுறித்து அம்மூர் அடுத்த சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவர் கொண்டு வந்த மனுவில் கூறியிருந்ததாவது: ராணிப்பேட்டை அருகே உள்ள மாந்தாங்கல் காந்தி நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஈரோட்டில் உள்ள தனியார் மார்கெட்டிங் நிறுவனத்தில் நேரடி தொடர்பில் இருப்பதாகவும், ஒரு கிராம தங்கம் மார்க்கெட் விலையில் இருந்து ரூ.1,000 குறைந்த விலையில் தருவதாகவும் கூறி சுமார் ரூ.1 கோடியே 16 லட்சம் வரை மோசடி செய்துவிட்டார். இதுதொடர்பாக ஏற்கெனவே ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் டி.ஜி.பி. அலுவலகங்களில் புகார் அளித்தேன். அதன்பேரில் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அந்தப்பெண் மீதும், அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கைது செய்யவில்லை. இந்த கும்பல் இன்னும் பல பேரை ஏமாற்றிக்கொண்டு வருகிறார்கள். எனவே இந்த கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று பணத்தை இழந்த மக்கள் புகார் பெட்டியில் புகார் மனுக்களை போட்டு விட்டு சென்றனர்.
Tags:    

Similar News