ஒசூர் பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

ஒசூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2024-04-19 15:51 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி என்பது தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்கள் தொழிலை தேடி வந்து வசிப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம் பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் ஒரே நேரத்தில் தங்களின் சொந்த ஊர்கள்க்கு செல்ல படையெடுத்தால், ஒசூர் மாநகரமே வெறிச்சோடி நிலையில் ஒசூர் மாநகராட்சி பிற மாவட்ட மக்களின் எண்ணிக்கையை கொண்டுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைப்பெற்று வருவதால் ஒசூரிலிருந்து திருவண்ணாமலை, வேலூர்., சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு தேர்தலில் வாக்களிக்க நேற்று முதல் அதிகப்படியான மக்கள் கூட்ட நெரிசலில் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.

தேர்தல் வாக்குப்பதிவான இன்று தான், பல்வேறு தொழிற்சாலைகளில் விடுப்பு வழங்கப்பட்டதால் தொழிலாளர்களின் கூட்டத்தால் ஒசூர் பேருந்து நிலையம் திருவிழாவை போல காட்சியளிக்கிறது ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தும், பேருந்துகள் இன்றி கைக்குழந்தைகளுடன் பேருந்து நிலையத்தில் காத்து கிடக்கும் அவலம் ஏற்ப்பட்டுள்ளது சாதாரண நாட்களில் இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கையும்,

இன்று குறைந்து காணப்படுவதாக கூறும் பயணிகள் இன்று மாலைக்குள் வாக்களிக்க பேருந்து வசதிகளை செய்து தர அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News