பாபநாசம் 108 சிவாலயம் ஸ்ரீ வீர மகா காளியம்மன் ஆலய திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

பாபநாசம் 108 சிவாலயம் ஸ்ரீ வீர மகா காளியம்மன் ஆலய திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2024-04-08 07:38 GMT
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வங்காரம் பேட்டை 108 சிவாலயம் ஸ்ரீ வீர மகா காளியம்மன் பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக  குடமுருட்டி ஆற்றில் இருந்து அக்கினி கொப்பரை ,கரகம், பால்குடம் ,அழகு காவடி வேல் காவடி, எடுத்து வானவேடிக்கை, தப்பாட்டம், மற்றும் மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சாமி ஊர்வலம் வந்தது. பின்னர் அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வங்காரம் பேட்டை 108 சிவாலய கிராம கிராமவாசிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News