இரும்பு கம்பி விழுந்து கிரஷர் டிரைவர் பலி
புதுக்கோட்டை மாவட்டம், காட்டுபாவா பள்ளிவாசலில் உள்ள கல்குவாரியில் இரும்பு கம்பி விழுந்து கிரஷர் டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-04-08 02:27 GMT
இரும்பு கம்பி விழுந்து கிரஷர் டிரைவர் பலி
திருமயம் அருகே காட்டுபாவா பள்ளிவாசலில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி கிரஷர் உள்ளது. இங்கு தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்த செல்வம்(40) என்பவர் தங்கி டிரைவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று செல்வம் கிரஷரில் இருந்த மின் மோட்டாரை சரிசெய்தபோது இரும்பு ராடு கழன்று அவரது தலையில் விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்தார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தார். திருமயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.