சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் இலவச பொது மருத்துவ முகாம்!
சிஎம்சி மருத்துவமனை மற்றும் சிஎஸ்ஐ காட்பாடி திருச்சபை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடத்தியது;
Update: 2024-03-31 18:20 GMT
மருத்துவ முகாம்
சி.எஸ்.ஐ. காட்பாடி திருச்சபை மற்றும் சி.எம்.சி. மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் காட்பாடி சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் நடைபெற்றது. முகாமில் திருச்சபை ஆயர் பர்னபாஸ் அப்சலோம் ஜெபம் செய்தார். பெரில் பர்னபாஸ் ரிப்பன் வெட்டி முகாமை தொடங்கி வைத்தார். பொது மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் கண் பரிசோதனை, பல் பரிசோதனை மற்றும் பிசியோதெரபி செய்து பயன்பெற்றனர்.