வெள்ளரிக்கு விலை கிடைக்கல... விவசாயிகள் வேதனை

உசிலம்பட்டியில் வெள்ளரிக்காய்களுக்கு உரிய விலை கிடைக்காததால், செடியிலேயே மாடுகளுக்கு இரையாகும் அவலம் தொடர்கிறது.

Update: 2024-05-21 02:11 GMT

உசிலம்பட்டியில் வெள்ளரிக்காய்களுக்கு உரிய விலை கிடைக்காததால், செடியிலேயே மாடுகளுக்கு இரையாகும் அவலம் தொடர்கிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்லுப்பட்டி, ஆரியபட்டி, உச்சப்பட்டி ஆகிய கிராமப்பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட வெள்ளரிக்காய் விவசாயம் செய்துள்ளனர். இவை நன்கு விளைச்சலைக்கண்டுள்ள நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வரை வியாபாரிகள் வெள்ளரி விவசாயம் செய்துள்ள தோட்டத்திலேயே வந்து 50கிலோ அடங்கிய வெள்ளரி மூட்டையை ரூ.3000 முதல் ரூ4000 வரை விலை கொடுத்து வாங்கி சென்றுள்ளனர்.

ஆனால் தற்போது உசிலம்பட்டிப் பகுதியில் கடந்த 3 தினங்களாக மாலை வேளையில் பெய்து வரும் தொடர் மழையினால் வெள்ளரியை வாங்க வியாபாரிகள் வருவதில்லை. வெள்ளரி விவசாயிகள் வெள்ளரியை பறித்து சாலையின் ஓரத்தில் விற்றாலும் வாங்க ஆளில்லை. இதனால் விவசாயிகள் வெள்ளரியை பறிக்காமல் செடியிலேயே விட்டு விட்டு மாடுகளுக்கு இரையாக்கி வரும் அவல நிலை ஏற்ப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு வெள்ளரி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்....

Tags:    

Similar News