சேலத்தில் உழவர் திரள் பெருவிழா !
அட்மா திட்டத்தின் சார்பில் உழவர் திரள் பெருவிழா அம்மாபாளையத்தில் நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-08 09:51 GMT
உழவர் திரள் பெருவிழா
சேலம் பனமரத்துப்பட்டி வட்டார வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் சார்பில் உழவர் திரள் பெருவிழா அம்மாபாளையத்தில் நடந்தது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வேலு தலைமை தாங்கி மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் மானிய விவரங்கள், சொட்டுநீர் பாசனம் அமைத்தல், அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். விவசாயிகள் எளிய முறையில் திட்டங்கள் மற்றும் மானியங்களை அறிந்து கொள்ள ஏதுவாக உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து இடுபொருள் முன் பதிவு குறித்து பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். கூட்டத்திற்கு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்து கூறினர். சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் பயிர் ஊக்கிகள், உயிர் உரங்கள், உயிர் பூஞ்சான கொல்லிகள், இனக்கவர்ச்சி பொறி மற்றும் மஞ்சள் நீல வண்ணம ஒட்டு பொறிகள் ஆகியன கண்காட்சியாக வைக்கப்பட்டன. ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் வைரபெருமாள், அட்மா திட்ட அலுவலர்கள் சுமித்ரா, தாழ்குழலி ஆகியோர் செய்து இருந்தனர்.