அஞ்சல் துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்
சேலத்தில் அஞ்சல் துறை சார்பில் வரும் 13ல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
Update: 2024-01-27 02:01 GMT
தமிழ்நாடு அஞ்சல் வட்டம், அஞ்சல் துறை சார்பில் வட்ட அளவிலான குறை தீர்க்கும் கூட்டம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந் தேதி காலை 11 மணிக்கு சென்னை முதன்மை அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்திற்கு முதன்மை அஞ்சல் துறை தலைவர் தலைமை தாங்குகிறார். இதில் வாடிக்கையாளர்கள் தங்களது குறைகளை தாக் அதாலத் என்ற தலைப்பில் வருகிற 31-ந் தேதிக்குள் சுவாதி மதுரிமா, உதவி அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002 என்ற முகவரிக்கு அல்லது pg.tn.@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இந்த குறைத்தீர்க்கும் முகாமில் விரைவு அஞ்சல், பார்சல்கள், மணி ஆர்டர்கள் மற்றும் சேமிப்பு பத்திரங்கள் மற்றும் இதர சேவைகள் குறித்த குறைகள் முகாமில் பரிசீலிக்கப்படும்.