அரசுக்கு சொந்தமான இடத்தில் மரங்களை வெட்டி விற்பனை
அச்சிறுப்பாக்கம் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் மரங்களை வெட்டி விற்பனை சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை.
Update: 2024-04-30 07:17 GMT
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள கீழ் மின்னல் கிராமத்தில் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து வடியும் உபரிநீர் செல்லும் ஓடை அருகே கிராம மக்கள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் உபரிநீர் செல்ல வழியில்லாமல் சுமார் 20 - க்கு மேற்பட்ட குடும்பங்கள் ஆக்கிரமைப்பு செய்துள்ளனர். குறிப்பாக ஆடு மற்றும் மாடு மேயும் பகுதியில் சுமார் 40 -க்கும் மேற்பட்ட குடும்பம் புறம்போக்கு நிலத்தினை மடக்கி வீடு கட்டியும், மரம் வைத்தும் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனிநபர் அரசுக்கு சொந்தமான சுமார் 2 - ஏக்கர் நிலத்தில் உள்ள மரங்களை வெட்டி 5லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்களை வெட்டி விற்பனை செய்துள்ளார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் மதுராந்தகம் வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது மேலும் இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.