பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் திடீர் சந்திப்பு

பாமக தலைவர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சந்தித்தார்.

Update: 2024-02-07 01:52 GMT

சிவி சண்முகம் சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்பி நேற்று இரவு 7:30 மணியளவில் ரகசியமாக சந்தித்தார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி தனிமையில் பேசியுள்ளனர். இருதரப்பிலும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்.பி .மரியாதை நிமித்தமாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News