சண்டிகரில் நடைபெற்ற 63வது சீனியர் தேசிய தடகள போட்டியில் பதக்கங்களை பெற்ற CVB ஸ்போர்ட்ஸ் அகாடமி
சண்டிகரில் நடைபெற்ற 63வது சீனியர் தேசிய தடகள போட்டியில் பதக்கங்களை பெற்ற CVB ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு தெரிவித்தார்.
By : King 24x7 Angel
Update: 2024-07-05 09:45 GMT
விமான நிலையம் சென்னை சண்டிகரில் நடைபெற்ற 63வது சீனியர் தேசிய தடகள போட்டியில் பதக்கங்களை பெற்ற CVB ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர்களை முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் சென்னை விமான நிலையத்தில் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார் சண்டிகரில் 63 வது தேசிய அளவிலான சீனியர் தடகளப் போட்டிகள் நடைபெற்றது இந்த தடகள போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 வீரர்கள் கலந்து கொண்டனர், இந்த தடகள போட்டியில் சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 10 வீரர்கள் கலந்து கொண்டனர், இதில் ஐந்து பதக்கங்களை பெற்று சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர்கள் சாதனை படைத்துள்ளனர் இதில் குறிப்பாக போல் வால்ட் போட்டியில் யுகேந்திரன் தங்கப்பதக்கம் வென்று பெற்று சாதனை படைத்துள்ளார் மேலும் பவித்ரா, பேபி ஆகிய இருவரும் வெள்ளி பதங்கமும், நித்தின், அருண் இருவரும் வெண்கல பதங்களை பெற்றுள்ளனர் பின்னர் சென்னை விமான நிலையம் வந்த வீரர்களை முன்னால் அமைச்சரும், சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் மற்றும் CVB ஸ்போர்ட்ஸ் அகாடமி செயலாளர் சி.மணிகண்டன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி வரவேற்றார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்:- "தேசிய அளவிலான 63வது சீனியர் தடகள போட்டியில் சிவிபி அகாடமி சார்பில் 10 பேர் கலந்து கொண்டனர் அதில் ஐந்து பேர் பதக்கங்களை வெற்றி பெருமையும் சாதனையும் படைத்துள்ளனர், குறிப்பாக போல் வால்ட் போட்டியில் தங்கம் வென்றுள்ளார், அதேபோல பவித்ரா பேபி அவர்கள் நேஷனல் ரெக்கார்ட் பண்ணி ரெண்டு பேரும் சில்வர் பொற்றுருக்காங்க, நிதின் அருண் அவங்க ரெண்டு பேரும் வெண்கலம் வாங்கி இருக்காங்க ரொம்ப பெருமைக்குரிய விஷயம், மேலும் இன்னும் இவர்கள் உலக அளவில் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் சாதனை படைக்க வேண்டும் என்பது தான் சிவிபி அகாடமியின் நோக்கம் , இதற்கு சிவிபி அகடமி எப்பொழுதும் துணை நிற்கும், இதற்கு துணை நின்ற CVB அகடமி செயலாளர் மணிகண்டன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்து கொள்கிறேன்." " சிவிபி அகாடமி ஆனது எந்த ஒரு அரசியல் நோக்கமும் இல்லை, நம் ஊரை சார்ந்த, நம் மண்ணை சார்ந்த விளையாட்டு வீரர்கள் பல்வேறு திறமை இருக்கிறது. அதை வெளி கொண்டு வந்து தேவையான உதவிகளை சிவிபி அகடமி செய்து கொடுக்கிறது" என்று தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீரர் பவித்ரா:- " நான் பெற்ற முதல் தேசிய அளவிலான பதக்கம் இது, இந்த பதக்கங்களை பெற உதவிய முன்னாள் அமைச்சர் சார் விஜயபாஸ்கார் அவர்களுக்கு ரொம்ப நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்னிடம் விளையாடுவதற்கு ஷூ கூட கிடையாது எனக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுத்தது சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி தான் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், இரண்டு மைக்ரோ செகண்டில் எங்களுக்கு தங்கப்பதக்கத்தை இழுந்துள்ளோம் மீண்டும் தீவிரமாக பயிற்சி பெற்று அடுத்த போட்டியில் தங்க பதக்கத்தை வெல்வோம்.