கல்லுாரி மாணவர்களுக்கு சைபர் க்ரைம் விழிப்புணர்வு

தமிழக காவல் துறை சைபர் க்ரைம் பிரிவு மற்றும் சென்ன, கீழ்ப்பாக்கம் ரோட்டரி கிளப் சார்பில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-05-28 08:53 GMT

 ஏ.டி.ஜி.பி., சஞ்ஜய்குமார்

தமிழக காவல் துறை, சைபர் க்ரைம் பிரிவு மற்றும் சென்னை, கீழ்ப்பாக்கம் ரோட்டரி கிளப் இணைந்து, ஸ்ரீபெரும்புதுார் அருகே தண்டலத்தில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரியில் நேற்று, மாணவர்களுக்கான சைபர் க்ரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. கல்லுாரி துணைத் தலைவர் அபய் மேகநாதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக சைபர் க்ரைம் பிரிவு காவல் துறை ஏ.டி.ஜி.பி., சஞ்ஜய்குமார் பங்கேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், 'ஆன்லைன்' பரிவர்த்தனை, சமூக வலைதளங்களில் எந்த மாதிரியான தகவல்களை பரிமாற்றிக் கொள்ள வேண்டும், சைபர் க்ரைம் வாயிலாக பண இழப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசப்பட்டது. தவிர, மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள், அவற்றில் கவனமுடன் இருப்பதற்கான வழிமுறைகள், சமூக வலைதளங்களில் நடக்கும் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிதி மோசடி குறித்து புகார் அளிக்க உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. 1,000க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News