நெல்லை மாநகரில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு
சைபர் கிரைம் விழிப்புணர்வு
Update: 2024-06-24 05:08 GMT
திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மாநகர பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பல் குறித்து இன்று விளக்கினர். அப்போது பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், இணைய வழியில் நடைபெறும் குற்றங்கள் பற்றியும், சமூக வலைதள பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் இணைய வழி குற்றங்களால் பாதிக்கப்பட்டால் 1930 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கவும் கூறப்பட்டது.