மாணவ மாணவர்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு !
மாணவ மாணவர்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-07-12 12:02 GMT
விழிப்புணர்வு
அர்த்தநாரீஸ்வரர் கல்லூரியில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மாணவ/ மாணவியர்களுக்கு வாழ்வில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராகளாக திருச்செங்கோடு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கம் தலைமை காவலர் பிரபு கண்ணன் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வை வழங்கினர்.
இந்நிகழ்வில் இக்கல்லூரியின் முதல்வர் வெங்கடாசலம் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ/மாணவியர்கள், பெற்றோர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலரும் வணிக நிர்வாகவியல் துறை உதவிப்பேராசிரியருமாகிய முனைவர் மோகன் ஏற்பாடு செய்திருந்தார்.