இளைஞரிடம் இணையவழியில் ரூ. 26.26 லட்சம் மோசடி

தஞ்சாவூர் அருகே இளைஞரிடம் இணையவழியில் ரூ. 26.26 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-05-31 03:14 GMT

பைல் படம் 

தஞ்சாவூா் அருகே அய்யம்பேட்டை பகுதியைச் சோ்ந்த வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வரும் 42 வயது நபருக்கு கடந்த ஏப்ரல் மாதம் முகநூல் செயலியில் அடையாளம் தெரியாத மா்ம நபா் அனுப்பிய தகவல் வந்தது. அதில், இணையவழி மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வா்த்தகம் செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை நம்பிய அவா் அதிலிருந்த கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டபோது, அவருடைய எண்ணை அது வாட்ஸ் ஆப் குழுவில் மா்ம நபா்கள் இணைத்தனா். வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்த அவா் மா்ம நபா்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொண்டாா். அப்போது, மா்ம நபா்கள் கூறியபடி, இணைவழியில் பல்வேறு தவணைகளில் ரூ. 26.60 லட்சம் முதலீடு செய்தாா். ஆனால், இதற்கான லாபத் தொகையாக ரூ. 36 ஆயிரம் மட்டுமே கிடைத்தது.

இதுதொடா்பாக அவா் மா்ம நபா்களைத் தொடா்பு கொண்டபோது, மேலும் தொகையை அனுப்பினால் லாபம் கிடைக்கும் எனக் கூறி வாட்ஸ் ஆப் குழுவிலிருந்து வெளியேற்றிவிட்டனா். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பாதிக்கப்பட்ட நபா் தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Tags:    

Similar News