நீரில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் பாதிப்பு - மக்கள் குற்றச்சாட்டு
வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மீன் பிடிக்க ஏலம் எடுத்தவர்கள் நீரில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் நீர் நிலை பாதிக்கப்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் கூறி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Update: 2024-02-06 05:27 GMT
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மீன்வளத்துறை சார்பில் மீன்கள் வளர்க்கப்பட்டு அதை விற்பனை செய்யப்படுவதற்காக தனியாரிடம் ஒப்பந்தம் விடப்பட்டது கோயம்புத்தூரில் சேர்ந்த ஜஹாங்கிர் மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தத்தை எடுத்து ஆட்களை வைத்து மீன்கள் பிடித்து விற்பனை செய்து வந்தார் இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் அளவுக்கு அதிகமான மீன் குஞ்சுகளை விட்டு அதன் எடையை அதிகரிக்க கோழி கழிவுகள், மீன் கழிவுகளை ஆற்றில் கொட்டுவதால் நீர் சுகாதாரமற்ற முறையில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதிவாசிகள் குற்றச்சாட்டாக தெரிவிக்கின்றன மேலும் அரசின் ஒப்பந்த விதிகளுக்கு எதிராக எடை குறைவாக உள்ள மீன்களை பிடித்து மீன்வளத்துறை நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றன எனவே மீன்வளத்துறை விதிகளுக்கு எதிராக செயல்படும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மீன்வளத்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்