மணிமுக்தா அணையில் மீன்பிடி பொருட்கள் சேதம்: 22பேர் மீது வழக்கு

மணிமுக்தா அணையில் மீன்பிடி பொருட்கள் சேதபப்படுத்தியதாக 22பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-02-01 10:12 GMT

காவல் நிலையம் 

மணிமுக்தா அணையில் மீன்பிடி பொருட்களை சேதப்படுத்தியதாக 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கராபுரம் தாலுகா குச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் முருகன்.

இவர் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். இவர் தன்னுடன் 40 உறுப்பினர்களை சேர்த்து மணிமுத்தா அணையில் மீன் பிடி குத்தகை எடுத்துள்ளார். இவர் தியாகதுருகம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துள்ள புகார் மனுவில்,' கடந்த 29 ம் தேதி மந்தபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அணையில் மூழ்கி இறந்து விட்டார்.

அதற்கு நாங்கள் தான் காரணம் என்று நினைத்து பழைய சிறுவங்கூரைச் சேர்ந்த மாரி மகன் மணிகண்டன், ராமச்சந்திரன், அன்பழகன், ஆறுமுகம், கதிர்வேல் உட்பட 22 பேர் அணையில் வைத்திருந்த மீன்பிடி வலை, சேர், கொட்டகை மற்றும் இருசக்கர வாகனங்கள் உட்பட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளனர் என்று முருகன் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News