மயூரநாதர் ஆலயத்தில் இரண்டாம் நாள் நாட்டிய அஞ்சலி

மகா சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்ற பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீணட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.;

Update: 2024-03-09 02:14 GMT

மகா சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்ற பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீணட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை ஆர்.ராஜ்குமார் 08.03.2024 மகா சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் விடிய விடிய நடைபெற்ற பூஜை. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீணட வரிசையில் நின்று விடிய விடிய சுவாமி தரிசனம் செய்து கோயிலில் நடைபெற்ற மயூரநாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மாயூரநாதர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு துவங்கி அதிகாலை வரை நான்கு காலங்களாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

Advertisement

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி அம்பாளை வழிப்ட்டனர். சிவராத்திரியை முன்னிட்டு ஆலயத்தில் விடியவிடிய நடைபெற்ற மயூரநாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அப்ஸரா ஆர்ட்ஸ் குழுவினரின் கதக், கோவை, கேரளா, பெங்களுர், ஆந்திரா, விசாகப்பட்டினம், வாலாஜா உள்ளிட்ட வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த நாட்டிய நிகழ்வுகளை கண்டு ரசித்தனர். இறைபணி குழவினர் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு விடியவிடிய அன்னதானம் வழங்கினர்.

Tags:    

Similar News