மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில் தருமை ஆதீனம் பங்கேற்பு

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில் தருமை ஆதீனம் பங்கேற்று புனித நீராடினார்

Update: 2023-12-10 12:34 GMT

தீர்த்தவாரியில் தருமை ஆதீனம் பங்கேற்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் கார்த்திகை கடைஞாயிறை முன்னிட்டு, காவிரிதீர்த்த படித்துறையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. குத்தாலத்தில் உள்ள காவிரியில், புனிதநீராடி சூரியதேவன் புனிதம் பெற்ற நாள் கார்த்திகை மாத கடைசி ஞாயிறு என்பது ஐதீகம். அதனை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாத கடைஞாயிறு அன்று சிவ, வைணவ தலங்களிலிருந்து, பஞ்சமூர்த்திகள் காவிரி கரையில் எழுந்தருளி ,தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கார்த்திகை மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும், தீர்த்தவாரி உற்சவம், குத்தாலம் காவிரிதீர்த்த படித்துறையில் நடைபெறுவது வழக்கம். கடைஞாயிறன்று, சிவ வைணவ தலங்களிலிருந்துசாமி, மற்றும் அம்பாள் புறப்பட்டு, வீதி உலாவாக காவிரி கரையில் எழுந்தருளினர். அங்கு அஸ்திரதேவர்க்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீன மடாதிபதி, 27 வது சன்னிதானம், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரியில் புனித நீராடி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News