யானைக்கு வாழைப்பழம் ஊட்டிய தருமைஆதீனம்
தருமபுரத்தில் 600ஆண்டுகள் பழைமை வாய்ந்த சைவ ஆதீன மடத்தில் பழைமையான அஷ்ட தசபுஜ மகாலெட்சுமி துர்கா ( பதினெட்டு கைகளுடன் கூடிய) அம்பாளுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு நவராத்திரியை முன்னிட்டு, 9 நாட்கள் நடைபெறும் சதசண்டி மகாயாகம் கடந்த 14ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கி நடைபெற்றது. ஒன்பது நாட்களில் நவசண்டி யாகம், நான்கு வேதங்கள் ஓதுதல், விருட்சபூஜை, நவ விளக்கு பூஜை, உள்ளிட்டவை நடைபெற்றன.
நிறைவு நாளான இன்று, வசூந்தரா பூஜை செய்து அம்பாளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. தருமபுர 27வது குருமஹாசன்னிதானம், ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக யாகத்திற்கு வந்திருந்த யானைக்கு தருமஆதீனம் வாழைப்பழங்களை ஊட்டினார்.