பத்திரகாளியம்மன் கோவிலில் தசரா பண்டிகை கொண்டாட்டம்
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் தசரா விழா சிறப்பாக நடந்தது.
தமிழகம் முழுவதும் தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு 15ம் ஆண்டு தசரா பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தசரா திருவிழா துவங்கியது. திருவிழா காலங்களில் பத்ரகாளியம்மன் லட்சுமி, சரஸ்வதி, மகாலட்சுமி, பத்ரகாளி போன்ற அலங்காரங்களில் எழுந்தருளி நகர்வலம் வந்து பொதுமக்களுக்கு அருள் வழங்கினார். திருவிழாவின் இறுதி நாளான இன்று 24.10.23 நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அம்மன்,குறவன், குறத்தி, சுடலைகருப்பன், சிங்கம், கரடி, அரக்கன், அரக்கி, போன்ற பல வேடங்களில் அணிந்து ஆட்டம் பாட்டத்துடன் மேளதாளங்கள் முழங்க கோயிலை வலம் வந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நிகழ்ச்சி இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. பத்ரகாளியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் நகரின் முக்கிய வீதிகல் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தார். பின்னர் கோவிலை சுற்றி வந்த பத்ரகாளியம்மன் கோயில் வாசலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது முதலாவதாக அம்மனை எதிர்கொண்டு போரிட்ட கஜமுகனை சூலாயத்தால் வதம் செய்தார். இரண்டாவதாக சிங்கமுகனை வதம் செய்தார் அதனைத் தொடர்ந்து அசுரன் மற்றும் சேவல் ஆகியோரை வதம் செய்தார். பின்னர் பத்ரகாளி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது இத்துடன் திருவிழா நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.