தாய் மகளைத் திட்டியதால் மனம் உடைந்த மகள் தற்கொலை
திருவாரூர் மாவட்டம்,கொடராச்சேரி அருகே தாய் திட்டியதால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-03-18 02:20 GMT
தற்கொலை
கொரடாச்சேரி அருகே அத்தி சோழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதிகா இவரது வீட்டில் மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி உள்ளார் . இந்நிலையில் ராதிகாவின் மகள் தீபிகாவுக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வாய் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து ராதிகா தனது மகள் தீபிகாவை கண்டித்துள்ளார் இதனால் மனமுடைந்த தீபிகா வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.