இறந்த தாயின் பென்சன் கேட்டு மகள் தரணா
ஆத்தூரில் இறந்த தாயின் பென்சன் தொகையை தராமல் அலைக்கழிக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அவரது மகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.;
Update: 2024-03-05 02:45 GMT
தர்ணா
சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த மாதையன் மனைவி மல்லிகா இவர் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக மல்லிகா கடந்த 1998 முதல் 2018 வரை பணிபுரிந்தார் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து தனது தாயின் ஆறு ஆண்டுகளுக்கு மேலாகி வாரிசுதாரர்களுக்கு வழங்க வேண்டிய பென்ஷன் தொகையை வழங்காமல் அலைக்கழித்து வருவதாக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி நுழைவாயில் முன்பு மல்லிகா மகள் வனிதா திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆணையாளர் சையது முஸ்தபா கமால் வனிதாவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.