ஏரியில் வீசப்படும் இறந்த கோழிகள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சங்ககிரி அருகே மோரூர் பெரிய ஏரியில் இறந்த கோழிகளை வீசி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-04-25 05:10 GMT

ஏரியில் மிதக்கும் இறந்த கோழிகள் 

சேலம் மாவட்டம், சங்ககிரி ஆர்.எஸ்., அருகே உள்ள மோரூர் பெரிய ஏரியில் கடந்த சில வாரங்களாக அடையாளம் தெரியாத நபர்கள் இறந்த கோழிகளை வீசி செல்வதால் நீர் மாசுஅடைந்து வருவதுடன் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசி வருவதையடுத்து எனவே இறந்த கோழிகளை வீசி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், விவசாயிகளும் செல்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மோரூர் பெரிய ஏரி 100 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பெய்த கனமழையில் ஏரி அதன் முழு கொள்ளவையும் எட்டிய நிலையில் நிரம்பி வழிந்து சென்றது. 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதையடுத்து அப்பகுதி விவசாயிகள் பூஜைகள் செய்து இயற்கையை வழிப்பட்டனர். ஏரியில் நிரம்பிய தண்ணீர் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் உயர்வதற்கும், கால்நடைகளை மேய்ப்பதற்கும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக வெப்பம் அதிகரித்து வருவதையடுத்து ஏரியில் உள்ள தண்ணீரின் அளவும் குறைந்து வருகின்றன.

அதனையடுத்து அடையாளம் தெரியாத நபர்கள் இறந்த கோழிகளை ஏரி நீரில் தினசரி வீசி செல்வதால் நீர் மாசு அடைந்து வருகின்றன. மேலும் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசி வருவதால் விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஏரியில் இறந்த கோழிகளை வீசி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நீர் ஆதாரங்களை பாதுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News