பாறைப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

பாறைப்பட்டி அருகே இருப்பிடம் திரும்பிய ஆண் மயில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Update: 2024-06-03 15:24 GMT

இறந்த ஆண்மயில்

கரூர் மாவட்டம்,கடவூர் தாலுகா, பண்ணப்பட்டி ஊராட்சியில் ரங்கபாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான மைல்கள் வயல்வெளியில் உள்ள தானியங்களை உண்டு வாழ்கிறது. இந்த மயில்கள் இரவு நேரங்களில் அப்பகுதியில் உயரமான மரங்களில் உள்ள கிளைகளில் தங்கி ஓய்வு எடுக்கிறது.

நேற்று முன் தினம் மாலை, மயில்கள் அனைத்தும் மரங்கள் மீது அடைவதற்காக பறந்து சென்று உள்ளது. இதில் மூன்று வயது உடைய ஆண் மயில் பாறைப்பட்டி- மஞ்ச நாயக்கன்பட்டி சாலையில் உள்ள மரத்தில் அமர்வதற்காக உயர பறந்து சென்றது. அப்போது, அருகில் இருந்த மின்கம்பியில் மயிலின் இறகுகள் உரசி உள்ளது.

மேலும், மயிலின் மீது மின்சாரம் பாய்ந்ததால், அந்த மின் கம்பியில் இறந்த நிலையில் கிடந்து உள்ளது அந்த ஆண் மயில். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள், கடவூர் வட்டாட்சியர் இளம்பரிதிக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சென்று, உயிரிழந்த ஆண் மயிலின் உடலை மீட்டு, கடவூர் வனக்காப்பாளர் சிவரஞ்சனியிடம் ஒப்படைத்தனர்.

இறந்த மயிலை அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் அதிகாரிகள் முன்னிலையில், குழி தோண்டி அதில் புதைத்தனர். கிராம பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம், கிராம மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News