நீர்த்தேக்கத்தில் எலக்ட்ரீசன் தவறி விழுந்து உயிரிழப்பு
கொடைக்கானல் பூண்டி நீர்த்தேக்கத்தில் அனுமதி இல்லாமல் பரிசல் சவாரி செய்த தனியார் பள்ளி எலக்ட்ரீசியன் பரிசல் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் ஒன்றாக உள்ள பூண்டி கிராமத்திற்கு அருகே பூண்டி நீர்த்தேக்கம் அமைந்து உள்ளது, இந்த நீர் தேக்கமானது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது,இந்த நீர் தேக்கம் மலை முகடுகள் நடுவே உள்ள மர சோலைகளின் இடையில் உள்ளது, மேலும் கடந்த சில மாதங்களாகவே உரிய பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது, மேலும் இந்த நீர்த்தேக்கதின் அருகில் சர்வதேச தனியார் பள்ளியின்(கோடை இண்டர் நேஷனல்) இடம் உள்ளதால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவியர்கள்,பணியாளர்கள் அவ்வப்போது எவ்வித அனுமதியின்றி பரிசல் சவாரி செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்,
இந்நிலையில் இந்த பள்ளியில் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்த அருண் ஐசக் எலக்ட்ரீசியனாக பணி பரிந்து வருகிறார், இதனை தொடர்ந்து இந்த பள்ளியில் பணியாற்றும் பணியாளர்கள் பூண்டி நீர் தேக்கத்திற்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது, மேலும் இந்த நீர்த்தேக்கத்தில் அருண் ஐசக் உடன் பணியாற்றும் 3 பணியாளர்கள் உள்ளிட்டோர் 4 நபர்கள் பரிசல் சவாரி செய்துள்ளனர், இந்நிலையில் பரிசல் எதிர் பாராத விதமாக ஏரியில் கவிழ்ந்ததாக சொல்லப்படும் நிலையில், உடன் வந்த 3 நபர்கள் பரிசலை பிடித்து கொண்டு கரைக்கு வந்ததாகவும், உடன் வந்த அருண் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றதால், கறைப்பகுதிக்கு நீண்ட நேரம் வராத நிலையில்,உடன் வந்த மூவர் அருணை நீண்ட நேரம் தேடியுள்ளனர்,
ஒரு கட்டத்தில் ஏரி தண்ணீரில் தத்தளித்த அருணை மீட்டுள்ளனர்,இதில் அருண் மூச்சு திணறல் ஏற்பட்டு மன்னவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அருண் வழியி லேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து தனியார் ஆம்புலென்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சடலத்தினை எடுத்து வந்து உடற்கூறு ஆய்விற்காக வைத்துள்ளனர், இது குறித்து கொடைக்கானல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,இச்சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.