பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் சாவு : உதவி கலெக்டர் விசாரணை

சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் இறந்ததை தொடர்ந்து உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2024-01-12 13:52 GMT

கோப்பு படம் 

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் தாயும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தினர். சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன். லேத் தொழிலாளி. இவருக்கும், ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டி செல்வந்தபுரம் பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா (வயது 27) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 4 ஆண்டுகளாக பிறகு வெண்ணிலா கர்ப்பம் ஆனார்.

குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெண்ணிலாவுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இதற்கிடையே பிரசவ வலி ஏற்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு திடீரென வெண்ணிலாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.

டாக்டர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். அப்படி இருந்தும் வெண்ணிலாவும், அவரது குழந்தையும் பரிதாபமாக இறந்தனர். இதனை அறிந்த வெண்ணிலா கணவர் தாமரைச்செல்வன், அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுதொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆவதால் வெண்ணிலா சாவு குறித்து சேலம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். பிரவசத்தில் தாயும், குழந்தையும் இறந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News