சேலத்தில் வீட்டை காலி செய்யுமாறு கொலை மிரட்டல்

சேலத்தில் வீட்டை காலி செய்யுமாறு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-06-02 13:59 GMT

சேலத்தில் வீட்டை காலி செய்யுமாறு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


சேலம் சுவர்ணபுரி வாஞ்சிநாதன் அய்யர் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி சுபா (வயது 40). இவர் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் நான் அதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் குடியிருந்து வருகிறேன். அதே குடியிருப்பில் ராணி என்பவரும் வசித்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு வீட்டு உரிமையாளர் உலகநாதன் என்பவரிடம் ரூ.2½ கோடி விலை பேசி ரூ.1.70 கோடி முன்பணத்தை நான் கொடுத்தேன். ஆனால் ராணி அந்த குடியிருப்பை விலைக்கு வாங்கி விட்டதாகவும், அதனால் எங்களை காலி செய்யுமாறு கூறினார்.

மேலும் வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டதால் நாங்கள் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். ஆனால் தொடர்ந்து வீட்டை காலி செய்யுமாறும் ராணியும், அவரது தரப்பினரும் எங்களது குடும்பத்தினரை மிரட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாங்கள் வெளியூர் சென்றிருந்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரை அவர்கள் சேதப்படுத்தினர். இதனால் எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே கொலை மிரட்டல் விடுக்கும் ராணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

புகாரின்பேரில் சுபா மற்றும் ராணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சுபாவிடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ராணி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த ரத்தினம், சுதாகர், முருகேசன் ஆகிய 4 பேர் மீது அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News