மீன்பாசி குத்தகை உரிமையை பொது ஏலத்தில் விட முடிவு
பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் உள்ள குளங்களில் மீன்பாசி குத்தகை உரிமைக்கான ஏலம் வரும் ஜன.31 அன்று நடக்க இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-01-25 01:30 GMT
தஞ்சாவூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ், பாபநாசம் வட்டம் அம்மாபேட்டை சரகத்தில் உள்ள வலையன்குளம், அய்யனார்குளம் மற்றும் நரிக்குளம் ஆகிய குளங்களின் மீன்பாசி குத்தகை உரிமையை 1433-ஆம் பசலிக்கு பொது ஏலத்தில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொது ஏலத்தில் எடுக்க விரும்புவர்கள் எண் : 873/4. அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுக வேண்டும். ஏலம் எடுக்க விரும்புவோர், இந்த அலுவலகத்தில் 31.01.24 தேதியன்று காலை 11 மணியளவில் நடைபெறும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளுமாறும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.