ஒகேனக்கல்லில் நீர் வரத்து சரிவு

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி 1500 கன அடியாக நீர்வரத்து சரிந்தது.

Update: 2024-05-26 12:52 GMT

ஒகேனக்கலில் நீர் வரத்து குறைவு

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மழையளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரித்தும் சரிந்து காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று வரை வினாடிக்கு 2000 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் வினாடிக்கு 1500 கன அடியாக நீர்வரத்து சரிந்தது. மேலும் தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பீலிகுண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர் வள மேலாண்மை துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News