நாராயண பெருமாள் கோவிலில் ஊஞ்சல் சேவை அலங்காரம்
வந்தவாசி அருகே எரமலூர் சுந்தரவல்லி சமேத நாராயண பெருமாள் கோயிலில் நடந்த ஊஞ்சல் சேவையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-02-04 03:25 GMT
ஊஞ்சல் சேவை அலங்காரம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே எரமலூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுந்தரவல்லி சமேத நாராயண பெருமாள் கோயில் விளங்கி வருகிறது. இங்கு தைமாத விசாக நட்சத்திரத்தில் சுந்தர வல்லி சமேத நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.