முதல்வர், கனிமொழி எம்பி குறித்து அவதூறு - ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவரின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Update: 2024-06-27 01:37 GMT

முதல்வர் மு.க.ஸ்டாலின் , கனிமொழி எம்பி (பைல் படம்)

தூத்துக்குடி மாவட்டம் பால்குளத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் பிரஜாபதி (34). இவர் கடந்த 7ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக ஆழ்வார் திருநகரி போலீஸார் பிரஜாபதியை கைது செய்தனர். இந்நிலையில் பிரஜாபதி தனக்கு ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி அய்யப்பன் குற்றம்சாட்டப்பட்ட பிரஜாபதியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News