மானாமதுரை அருகே பாலப்பணிகள் தாமதம்:பொதுமக்கள் குற்றச்சாட்டு

மானாமதுரை அருகே பாலப்பணிகள் தாமதமாக நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

Update: 2024-04-13 16:18 GMT

தாமதமாக நடைபெற்று வரும் பாலப் பணிகள்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடநேந்தல் - பெத்தானந்தல் இடையே உயர்மட்ட பாலம் கட்ட அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு, வேலை நடந்து வந்தது. அந்த பாலம் கட்டும் பணி இந்த மாதம் 11-ம் தேதியுடன் முடிவடைவேண்டிய நிலையில், வேலை பாதிவேலை கூட முடியவில்லை. மிகவும் மந்தகதியில் நடப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அந்த பாலம் கட்டும் பணியில் சென்ட்ரிங் போடுவதற்காக கம்பி கட்டப்பட்டு இருந்தது‌. இன்று லேசான கோடை மழை பெய்த போது பாலத்திற்காக கட்டப்பட்டிருந்த சென்ட்ரிங் கம்பிகள் தரமற்ற கட்டப்பட்டிருந்ததால் அப்படியே சரிந்து விழுந்தது.

அப்பொது லேசாக மழை பெய்து கொண்டிருந்ததால் வேலையாட்கள் யாரும் வேலை செய்யாததால், உயிர் பலி தடுக்கப்பட்டது. மேலும் இந்த பாலம் கட்டும்போதே இப்படி இருந்தால் கட்டி முடித்த பின் எப்படி கனரக வாகனங்கள், மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியும் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்

Tags:    

Similar News